search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள் வெட்டு"

    • தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    12ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தததை அடுத்து, ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

    குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்

    இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் (வயது 43). வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவரான சங்கர், பா.ம.க. பிரமுகராக உள்ளார். நேற்று மதியம் சங்கர், தனது மனைவி தனலட்சுமியுடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்டமர்மகும்பல் அங்கு வந்தது.பின்னர் அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கண் முன்னே தனது கணவரை மர்மகும்பல் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கதறி அழுதார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் எஸ்.என்.சாவடியை சோந்த் மகாலிங்கம் மகன்கள் சங்கா், விஜய், பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியை சோ்ந்த தங்கபாண்டியன், சதிஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன்காரணமாக சங்காின் தம்பி பிரபுவை (35) சதிஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கடந்த 28.2.2021 அன்று தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவா் மீது விரோதம் கொண்ட சதிஷ், வெங்கடேசன் உள்ளிட்டோா் சங்கரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரை அரிவாளால் வெட்டியவர்கள் மோட்டார் சை்ககிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து தற்போது 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
    • கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை.

    கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர்.

    இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவர்.
    • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு அவரது கணவர் தப்பியுள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக, பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் டில்லி ராணி என்பவர் பட்டப்பகலில் சீருடையில் இருந்தபோதே அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    தனிப்பட்ட விரோதத்தால் கணவரே வெட்டியுள்ளதாக செய்திகள் வந்தாலும், உண்மைக் காரணம் என்னவென்பதை காவல்துறை தீர விசாரித்து தொடர்புள்ளோரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    காரணம் எதுவாக இருப்பினும், சீருடையில் உள்ள ஒரு காவலரே பட்டப்பகலில் அரிவாளால் தாக்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம். இதற்கு காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

    தான் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக கூறி வரும் விடியா திமுக அரசின் முதல்வர், இனியாவது அந்த மாய உலகிலிருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
    • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

    பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.

    இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    • ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடினர். இதில் அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (48) என்னும் கூலித் தொழிலாளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தனது பேரன் சார்வின் (6) என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.

    அந்த சமயம் அங்கு கூச்சல் சத்தம் கேட்டதால் நாடகமேடை அருகே சென்றார். அப்போது அந்த 2 பேரும் பெரியசாமி மற்றும் அவரது பேரனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

    அரிவாளால் வெட்டிய இருவரும் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சினை காரணமா, அவர்களுக்குள் எதாவது முன்பகை உள்ளதா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் ளா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஊருக்குள் புகுந்து முன்பின் தெரியாத ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கட்டிட தொழிலாளி மீது வழக்கு
    • மண்டைக்காடு அருகே பரபரப்பு

    மணவாளக்குறிச்சி :

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன்கள் சதீஸ்(வயது 31), வினேஷ் (28). கட்டிட தொழிலாளர்களான இவர்களுக்கிடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று சதீஸ், தனது தம்பி வினேசை சந்தித்து தான் கொடுத்த கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினேஷ் தகாத வார்த்தையால் திட்டி பைக் சாவியால் சதீஸின் வலது கழுத்து, பின்னந்தலை ஆகிய பகுதியில் குத்தி காயப்படுத்தினாராம்.

    மேலும் அப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவா தத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதி யினர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், சம்பவ இடம் விரைந்து சென்றார். அவர் வினேஸை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வினேஸ், தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸை வெட்டினார்.

    இதில்அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் அரசு பணி செய்யாவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சதீசும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.

    சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

    இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த விவசாயியை சராமரியாக அரிவாளால் வெட்டினார்.
    • சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது45). விவசாயி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த சின்னை யாவை சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு குடல் சரிந்து கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்ட அவர் மேல் சிகிச்சை க்காக மதுரை அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சின்னையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நத்தம் போலீசார் அரிவாளால் வெட்டிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட்பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

    இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் ஓடிவந்து வெங்கடேச பெருமாளை கண்டித்து உள்ளார். இந்த முன்வி ரோதத்தில் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகே பெட்ரோல் பங்க் அருகே சென்ற அருண்கு மாரை வழிமறித்து ஆபாசமாக பேசிய வெங்கடேச பெருமாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில படுகாய மடைந்த அருண்குமாரை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை வேல்முருகன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

     சேலம்:

    சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).

    அரிவாள் வெட்டு

    இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விசாரணை

    இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×